மாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது!
தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் இல்லங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 06:05மணிக்கு நினைவுகூரப்பட்டுள்ளது.