மாலையணிந்த பிறகு சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஆனால், காரியங்கள் செய்யும்போது அதை தள்ளிப் போடக்கூடாதென்ற காரணத்தினால் முதலாவதாக வருகின்ற திதியோ முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. பகவான் ராமர், தனது தகப்பனார் தசரத மகாராஜாவுக்கு பம்பா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பம்பா நதியும் கங்கைக்கு இணையான புனித நதியாக கருதப்படுவதால், பம்பா நதிக்கரையில், நிறைய பக்தர்கள் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை காணலாம். அவர்கள் மாலையணிந்து கொண்டு செய்யவில்லையா என்ன?
எனவே, மாலையணிந்து கொண்டு சிரார்த்தங்கள் செய்வது என்பதில் எந்த தவறும் இல்லை. சபரி யாத்திரை விரதத்தின்போது இடையில் வரும் சிராத்தத்துக்காக மாலை அணிதலை பக்தர்கள் தள்ளிப்போட்டிருந்தால், இனி அவ்வாறு செய்யத்தேவையில்லை. ஏனெனில், முறையாக கர்மாக்கள் செய்பவரைக் கண்டு பகவானும் மகிழ்ச்சியே அடைவார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !