மாலைதீவை சென்றடைந்த பிரதமர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை மாலைதீவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, அந் நாடு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வேலானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அரச மரியாதைகளுடன் வரவேற்றார்.
மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைவாகவே மாலைதீவு சென்றுள்ள பிரதமர், செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரையில் மாலைதீவில் பெரடைஸ் அயிலன் றிசோட் ஹோட்டல் வளவில் நடைபெறும் 2019 ஆம் ஆண்டு இந்து சமுத்திர மகாநாட்டுக்காக தலைமைப் பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வகிக்கின்றார்.


இந்திய மன்ற நிறுவனம் இந்த மகாநாட்டை மாலைதீவு அரசாங்கம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சர்வதேச ஆய்வு தொடர்பான எஸ்.இராயரட்ணம் கல்லூரியின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இருதரப்பு தொடர்புகள் பல்வேறு துறைகளின் புரிந்துணர்வை முன்னெடுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிராந்திய மற்றும் சர்வதேச விடங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன.
பிரதமர் தலைமையில் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, சமூக ஊக்குவிப்பு அமைச்சர் தயாகமகே, கனியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.