மாலி தாக்குதலில் உயிரிழந்த இராணு வீரரின் இறுதிக்கிரியை: ஐ.நா. அதிகாரி பங்கேற்பு

ஐ.நா. அமைதி காக்கும் பணிகளின்போது உயிரிழந்த பொலனறுவையை சேர்ந்த இலங்கை வீரரின் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

மாலியில் உயிரிழந்த வீரர்களின் பூதவுடல்கள் கடந்த திங்கட்கிழமை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து பூதவுடல்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதன்படி பொலனறுவையை சேர்ந்த இராணுவ வீரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றுள்ளது.

இறுதி அஞ்சலி நிகழ்வில் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், உயிரிழந்த வீரரின் குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளை மேற்கொள்ளும்போது இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !