Main Menu

மாலியில் கிராம மொன்றில் ஆயுதமேந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 20பேர் பலி!

மத்திய மாலியில் உள்ள கிராமமொன்றில் ஆயுதமேந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 20பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மத்திய மொப்தி பிராந்தியத்தில் ஃபுலானி மேய்ப்பர்களின் கிராமமான ஓகோசாகோ கிராமத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து கேள்விப்பட்டதும், ஐநா அமைதிப்படையின் அதிவிரைவுப்படையினர் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிராமத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்தியவர்கள் நுழைந்து பொதுமக்களை நோக்கி துப்பாக்கியில் சராமரியாக சுட்டனர்.

அத்தோடு, வீடுகளுக்கும் தீ வைத்தனர். வீடுகளில் உள்ள பொருட்களையும், கால்நடைகளையும் சூறையாடி கொள்ளையடித்துச் சென்றனர்.

எனினும், யார் இந்த தாக்குதலை நடத்தியது என்பது குறித்து மாலி அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படவில்லை. இது சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மிக மோசமான பொதுமக்கள் படுகொலை என கூறப்படுகின்றது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதக் குழுவினரால் இனவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், இதே கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 150இற்க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

ஒகோசாகோவில் படுகொலை செய்யப்பட்ட டோகன் இனக்குழு, டான் நா அம்பாசாகோ குழு இத்தாக்குதலை நடத்தியிருக்க கூடுமென சந்தேகிக்கின்றது. எனினும், இதனை அந்த குழு, பொறுப்பை மறுத்துள்ளது.