மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது: ஆனந்தசங்கரி

இலங்கையில் மாற்றமொன்று ஏற்பட வேண்டிய நேரம் வந்துள்ளதென்றும், அதன் பிரதிபலிப்புகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை முதல் மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ஆனந்த சங்கரி, அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1970ஆம் ஆண்டுமுதல் தான் மஹிந்தவின் நண்பர் என்றும் அந்தவகையில் வாழ்த்து தெரிவிப்பதற்காகவே கொழும்பு வந்ததாகவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மாற்றமொன்று அவசியமென குறிப்பிட்டுள்ள ஆனந்த சங்கரி, புதிய ஆட்சியாளர்கள் அதனை நிறைவேற்றுவார்களென நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !