மாறு வேடத்தில் இரகசியமாய் அமெரிக்கா சென்ற சசெக்ஸ் சீமாட்டி!

சசெக்ஸ் சீமாட்டி மேகன் மாறுவேடத்தில் நியூயார்க்கில் காணப்படும் ஒளிப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி மாறுவேடத்தில், ரகசியமாக மேகன் எதற்காக நியூயார்க் சென்றார்? மேகனின் நெருங்கிய தோழிகள் அனைவரும் சேர்ந்து அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு திட்டமிட்டிருக்கின்றனர்.

அதற்காகவே திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக மேகன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தனது மிக நெருங்கிய தோழியும் ஆடை வடிவமைப்பாளருமான Jessica Mulroneyயும் அவரது மற்ற தோழிகளும் சேர்ந்து திட்டமிட்டுள்ள அந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்காகவே மேகன் நியூயார்க் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது நீண்ட கூந்தலால் முகத்தை மறைத்துக் கொண்டாலும், அவரது கையில் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் மேகனை நன்றாகவே காட்டிக் கொடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !