மார்செய் – யூதப்பாடசாலை – யூத வெதுப்பகம் மீது தாக்குதல் முயற்சி
நேற்று காலை மார்செய் நகரத்திலுள்ள யூதப்பாடசாலை அருகில் கத்தியுடன் சென்ற நபர் ஒருவர் காவற்துறையினரால் மடக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
60 வயதுடைய இந்த நபர், ஏற்கனவே காவற்துறையினரின் குற்றப்பட்டியலில் உள்ள நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யூதப் பாடசாலையுடன், அதனருகில் உள்ள ஒரு யூதர்களிற்கான வெதுப்பகமும் (boulangerie casher) இந்தத் தாக்குதல் முயற்சிக்கு இலக்காகி உள்ளது எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடாத்தப்பட முன்னரே காவற்துறையினர் நடவடிக்கை எடுத்தமையால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
உடனடியாக, இங்குள்ள யூத சமூகத்திற்கு பாதகாப்பை அதிகரித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Bouches-du-Rhône மாவட்ட ஆணையாளர் தெரிவித்துள்ளார்.