மார்செய் – தடம்புரண்ட மெற்றோ! – 14 பேர் காயம்

இன்று வெள்ளிக்கிழமை காலை மார்செயில் தொடரூந்து ஒன்று தடம் புரண்டதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

 தொடரூந்து தடம் மாற்றுவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரூந்து ஒன்று தண்டவாளத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, தானியங்கி முறையில் தடம் மாற்றப்பட்டது. அடுத்த தடத்தில் தொடரூந்து செல்லாமல், தண்டவாளத்தில் இடித்துக்கொண்டு, வெளியே சென்றுள்ளது. இதனால் 14 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.
இச்சம்பவம் காலை 8:30 க்கு பதிவானது. அதன் பின்னர் இரண்டாம் இலக்க மெற்றோ இன்று நாள் முழுவதும் தடைப்பட்டது. இது ஒரு தொழில்நுட்பக்கோளாறு எனவும் தீங்கிழைக்கும் எண்ணம் எதற்குமான தடயங்கள் சிக்கவில்லை  எனவும் மார்செய் நகர அரச வழக்கறிஞர் Xavier Tarabeux குறிப்பிட்டுள்ளார். தவிர இது தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !