மார்செயில் இடிந்து விழுந்த கட்டடங்கள் – இருவர் படுகாயம்!

பிரான்சின் மார்செயில் இன்று(திங்கட்கிழமை) இரண்டு கட்டடங்கள் இடிந்து நொருங்கியுள்ளன. இந்த தகவலை Bouches-du-Rhone அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மார்செயின் நகரின் rue d’Aubagne வீதியில் உள்ள கட்டிடங்களே இவ்வாறு இடிந்து நொருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கட்டிடங்கள் உடைந்த நிலையில் மூன்றாவது கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், தீயணைப்பு படையினர் தற்போது குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !