Main Menu

மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனம் 7,000 பேரை ஆட்குறைப்பு செய்கிறது!

பிரித்தானியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடி காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் 7,000 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளது.

பெரும்பாலான ஆட்குறைப்புகள் அதன் 60,000 வலுவான கடைத் தளத் தொழிலாளர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 12 சதவீதம் பேர் வேலை இழக்க நேரிடும் அதே நேரத்தில், தலைமை அலுவலக அதிகாரிகள் தரப்பும் பிராந்திய நிர்வாகமும் பாதிக்கப்படுகின்றன.

கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட எட்டு வாரங்களில், அதன் கடும் பாதிப்புக்குள்ளான ஆடை மற்றும் வீட்டு உபகரணங்களின் மொத்த விற்பனை 29.9 சதவீதம் சரிந்ததாக எம் அண்ட் எஸ் தெரிவித்துள்ளது. கடை விற்பனை 47.9 சதவீம் வீழ்ச்சியடைந்துள்ளது; ஒன்லைனில் 39.2 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 13 வாரங்களில் உணவு விற்பனை 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒன்லைன் மற்றும் வீட்டு விநியோகங்கள் வலுவாக இருந்தபோதிலும் ஆடை மற்றும் வீட்டுப் பொருட்களின் விற்பனை 2019 ஆம் ஆண்டை விட குறைவாக இருந்தாக நிறுவனம் கூறுகின்றது.

ஆட்குறைப்பு செய்யப்படவிருப்பவர்களை தாங்களாக விலகவும் முன்கூட்டியே ஓய்வுபெறவும் அறிவுறுத்தியுள்ளதாக எம் அண்ட் எஸ் தெரிவித்துள்ளது.