மாபெரும் வேலை நிறுத்தம் : பயணச்சிட்டை விற்பனையை இரத்துச் செய்யும் SNCF
டிசம்பர் 5 ஆம் திகதி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதில் முக்கியமாக தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொது போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட உள்ளன. இதையடுத்து பயணச்சிட்டைகள் விற்பனையை SNCF நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமையில் இருந்து டிசம்பர் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பயணச்சிட்டைகள் விற்பனையாக மாட்டாது. தவிர குறித்த நாட்களில் பயணிக்க முன்னதாக பயணச்சிட்டை எடுத்து வைத்திருந்தாலோ, அல்லது நவிகோ அட்டைகள் (அனைத்து நவிகோ அட்டைகளும் உள்ளடக்கம்) வைத்திருந்தாலோ குறித்த நாட்களுக்குரிய பணம் மீளளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.