மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியிலிருந்து நெய்மர் விலகல்!

பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழக அணியான பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் நட்சத்திர வீரரான ஜே.ஆர்.நெய்மர் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

சமீபத்தில் கணுக்காலில் காயமடைந்த நெய்மரை, 10 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அவர் எதிர்வரும் ஐரோப்பிய கால்பந்து கழக அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இங்கிலாந்தின் கழக அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான ரவுண்ட்-16 போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குழு ‘சி’ யில் இடம்பெற்றிருந்த பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, ஆறு போட்டிகளில் மூன்றில் வெற்றி, இரண்டில் தோல்வி, ஒன்றில் சமநிலை என 11 புள்ளிகளுடன் குழுவில் முதலிடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !