மாணவர் சங்கங்களும் அமைப்புகளும் செப்டம்பர் 21 ஆர்ப்பாட்டம்
அரசதலைவர் Emmanuel Macron, பிரதமர் Michel Barnier இணைந்து, தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு எதிராக அமைத்துள்ள அரசாங்கத்தினை எதிர்த்து மாணவர் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கம், குடும்ப ஒருங்கிணைந்த அமைப்பு என்பன பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடு முழுவதும் வரும் 21ம் திகதியன்று நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.பிரதமராக பதவியேற்றுள்ள Michel Barnier அவர்கள் “கடினமான ஒரு வலதுசாரி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பிரதமர், ஓரினச்சேர்க்கை கடந்த காலத்தைக் கொண்டவர் மற்றும் Mme Marine le Pen நிரந்தர உடன்படிக்கையுடன் மட்டுமே அவர் ஆட்சி செய்யப்போபவர்” இந்த நியமனம் ஜனநாயகத்திற்கு எதிரானது என மேல் குறிப்பிட்ட அமைப்புகள் தமது ஆர்ப்பாட்டத்துக்கான காரணத்தை கூறியுள்ளனர்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வலதுசாரிகளை நிராகரித்துவிட்டு இடதுசாரிகளை ஆட்சி அமைக்க அதிகப்படியான ஆசனங்களை வழங்கிய போதிலும் மிகக் குறைந்த ஆசனங்களை பெற்று நான்காம் இடத்தில் இருக்கும் கட்சி ஒன்று (les Républicain) ஆட்சி அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இது மக்களின் ஆணைக்கு எதிரானது என்றும் அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.