மாணவர்கள் உயிரிழப்பு: தற்கொலை தடுப்பு படையை அமைக்க வேண்டும் கமல் ஹாசன் கோரிக்கை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ந்தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனை தடுக்க தமிழக அரசு தற்கொலை தடுப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள் நடப்பதைப்போல பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.