மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட பிரபல சுவிஸ் கல்வியாளர்

சுவிட்சர்லாந்தில் விருதுகள் பெற்ற பிரபல கல்வியாளர் ஒருவர் மாணவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பிரபல கல்வியாளர்களில் ஒருவர் Jürg Jegge. பல்வேறு விருதுகளும் புத்தகங்களும் எழுதியுள்ள இவர் 1970களில் தாம் பணிபுரிந்த கல்வி நிலையங்களில் மாணவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தது குறித்து இவரின் முன்னாள் மாணவர் ஒருவர் புத்தகம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

இதனையடுத்து புத்தகம் வெளியான சில தினங்களில், மாணவர் Markus Zangger தமது புத்தகத்தில் வெளியிட்டுள்ள விடயங்கள் அனைத்தும் உண்மையே எனவும், தாம் குறித்த மாணவருக்கு 12 வயது இருக்கும்போது பாலியல் தொல்லை அளித்துள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து கல்வியாளர் Jürg Jegge மீது சூரிச் அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்த Jürg Jegge, பல மாணவர்களுடன் தாம் பாலியல் தொடர்பில் இருந்துள்ளதை ஒப்புக்கொண்டார்.

மட்டுமின்றி, தாம் உறவு கொண்ட மாணவர்களுக்கு ஏதேனும் வகையில் உதவுவதாகவே குறித்த செயலை கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அதுபோன்ற செயல்களில் தாம் அறவே ஈடுபடுவது இல்லை எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கல்வியாளர் Jürg Jegge பாலியல் உறவு மட்டுமே வைத்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டாரா என்பதையும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !