மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டம்!

நாட்டின் 45இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக சுறக்ஸா காப்புறுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலவசக்கல்வியை மேலும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்; காரியவசம் தெரிவித்துள்ளார்.

காலி சவுத் லாண்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வின்போது கல்வி அமைச்சர் மாணவிகளுக்கு பரிசில்களை வழங்கினார்.

அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் விசேட பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போதைய யுகத்திற்கு ஏற்றவகையில் கல்வி தொடர்பில் உன்னதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !