மாகாண சபையின் சிக்கலை தீர்க்க அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: வட மாகாண ஆளுநர்

அமைச்சர்களின் மாற்றத்தினால் வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார்.

யாழ். குருநகர் பகுதியிலுள்ள உயர் தொழில்நுட்ப நிறுவகத்துக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த ஆளுநர், அங்கு ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஆளுநர், ”ஏற்கனவே முதலமைச்சரினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட டெனீஸ்வரன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவிற்கமைய மீண்டும் அமைச்சராக கருதப்படுகிறார்.

மாகாண சபைகளுக்கு 5 அமைச்சர்களே இருக்க முடியும் என்ற சூழ்நிலையில் தற்போது ஆறு அமைச்சர்கள் உள்ளமை பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது.

ஒரு ஆளுநராக அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரமில்லை. எனவே, வட மாகாண முதலைச்சர் இது தொடர்பாக தாமதிக்காது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !