மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக தொடர் இழுபறி காணப்படும் நிலையில், இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !