மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி குறித்து பேச்சு!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய கூட்டணி குறித்த முறையான பேச்சுவார்த்தைகள் நாளை இடம்பெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சி ஆகியவருக்கிடையில் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கலந்துரையாடல் நிறைவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அறிவிக்கப்படும் என கூறினார். மேலும் மஹிந்த ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சியில் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

எனினும் 19 ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியிட முடியாது என்றும் அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !