மஹிந்தவிற்கும் பெருந்தோட்ட நிறுவன உரிமையாளர் களுக்கும் இடையில் கலந்துரையாடல்

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஸபக்ஷவிற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களது உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

தங்களது நாளாந்த வறுமானத்தை 1000 ரூபாவாக அதிகரித்து தரும்படி பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அதற்காக பல இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

எனினும் 600 ரூபாய்க்கு அதிகமாக நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க முடியாதென பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களது உரிமையாளர்களை பிரதமர் மஹிந்த ராஸபக்ஷ. சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளம் தொடர்பில் தான் பெருந்தோட்ட நிறுவனங்களது உரிமையாளர்களுடன் உரையாடுவதாக பிரதமர் மஹிந்த ராஸபக்ஷ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானை சநதித்தபோது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !