மஸ்க்குடனான நட்பு முறிந்தது – ட்ரம்ப்

ஈலோன் மஸ்க்குடனான தனது நட்பு முறிந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இருவரும் ஒருவரையொருவர் அண்மைக்காலமாக விமர்சித்து வருகின்றமையை சர்வதேச செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து விலகுவதாகத் தொழிலதிபர் ஈலோன் மஸ்க் முன்னதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும்,மஸ்க்கின் நடவடிக்கையில் தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பொன்றில் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.