மல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்

யாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு உள்ளது. மோதல் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த வேளை காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டு உள்ளது.அதனை அடுத்து காவல்துறையினர்; மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !