மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை

மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

92 வயது நிரம்பிய மஹதிர் முகமது மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

இதன்மூலம் உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்நிலையில், ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் அந்நாட்டு மன்னர்.

இதையடுத்து அவர் இன்று விடுதலையானார்.

அன்வர் இப்ராஹிமின் மனைவி தற்போது மலேசிய துணை பிரதமராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !