Main Menu

மலேசியாவில் திடீர் நிலச்சரிவு: மீட்புப்பணிகள் தீவிரம்

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கிருந்தனர். இந்நிலையில்,இன்று அதிகாலை இந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 79 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 79 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் 400 பேர் ஈடுபட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.