மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு ட்ரம்ப் அஞ்சலி!

மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்-இற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வொஷிங்டனின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் ஜனாதிபதியின் இறுதிக் கிரியைகள் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அமெரிக்க மாமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு நேற்று (திங்கட்கிழமை) முதல் பெண்மணி மெலனியாவுடன் சென்று, ட்ரம்ப் முன்னாள் ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை அஞ்சலி செலுத்தினார்.

சுமார் அரை மணிநேரம் அங்கிருந்த ஜனாதிபதி பொதுமக்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ எவ்வித கருத்துக்களையும் முன்வைக்காது அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.

அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ள ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பின்னர் இரு தடவைகள் நாட்டின் துணை ஜனாதிபதியாகவும் சேவையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !