மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தாரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்

தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 15-ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த உள்ளிடோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, வெளியூரில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்ததால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனால் பாலகுமாரன் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க இயலவில்லை.
இதனை தொடர்ந்து, தற்போது சென்னையில் உள்ள கமலஹாசன் இன்று கமலஹாசன் பாலகுமாரன் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மனைவி, மகன் உள்ளிட்டோரிடம் அவர் ஆறுதல் தெரிவித்தார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !