Main Menu

மர்ம வைரஸ் – மூன்றாவது நோய்த்தாக்கம் பரிசில் கண்டுபிடிப்பு..!!

முன்னர் வெளியிட்டிருந்த செய்தியின் படி, பிரான்சில் இரண்டு வைரஸ் கிருமி தாக்கியுள்ள நிலையில், தற்போது மூன்றாவது தாக்குதலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

நேற்று வெள்ளிக்கிழமை மாலை சுகாதார அமைச்சர் Agnès Buzyn தெரிவிக்கும் போது, பிரான்சில் இரண்டு நோய்த்தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு பரிசில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

இந்த வைரஸ் நோய் தாக்குதல் ஐரோப்பாவில் முதலில் கண்டறியப்பட்டது பிரான்சிலேயே.  டிசம்பர் மாதத்தில் இருந்து சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்த வைரஸ் தொடர்பாக பிரெஞ்சு அரசு பெரும் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.