மருந்தகங்களிற்கு அன்டி பயோட்டிக் தயாரிக்க அனுமதி
அன்டி பயோட்டிக் (ANTIBIOTIQUES) மருந்துகளிற்கு பிரான்சில் பெருமளவில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதன் அடிப்படை மருந்தான அமொக்ஸிலினிற்கு (amoxicilline) பெரிதும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
பக்றீரியாத் தொற்றுக்கள், சுவாசப்பை அழற்சி மற்றும் பல அழற்சிகள், ஏற்புகள் போன்றவற்றிற்கு அன்டி பயோட்டிக் மருந்துகள் அத்தியாவசியம்.
சிறு குழந்தைகளிற்கான சுவாச அழற்சித் தொற்று பெரிதும் அதிகரித்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தட்டுப்பாட்டை சமாளிக்க, மருந்துகளின் பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனமான Ansm (Agence nationale de sécurité du médicament) மருந்தகங்களிற்கு இவற்றைத் தாங்களே தாயரிக்கும் அனுமதியை வழங்கி உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மருந்தாளுனர்கள் (pharmaciens) இந்த மருந்துகளின் 125 மில்லிகிராம் மற்றும் 250 மில்லிகிராம் அளவீடுகளைத் தயாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி, தட்டுப்பாட்டுக் காலங்களிற்கான தற்காலிக அனுமதி மட்மே என மருந்துகளின் பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.