மருத்துவ உலகில் சாதித்த தமிழர்கள் கௌரவிப்பு!

மருத்துவ உலகில் சாதித்த தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாக உலகத்தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.

உலகத் தமிழர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் உலகத் தமிழர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘2018-ம் ஆண்டுக்கான உலகளாவிய சிறப்பு மருத்துவ விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

அந்த வகையில் கடந்த 70 ஆண்டுகளில் பிரித்தானியாவில் மருத்துவத் துறையிலும், பொது சுகாதாரத் துறையிலும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் எனப்படும் NHS மிகப்பலத்தை கொண்டுள்ளது. நமது நாட்டின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் NHS மேம்படுத்தியுள்ளது.

எனவே இதனை சிறப்பிக்கும் வலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 வது உச்சி மாநாட்டை கூட்டும் WTO – UK நிகழ்வில் இந்த மிகச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விருது விழாவை பிரம்மாண்டமாக நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரமாண்ட விருது வழங்கும் விழா எதிர்வரும் 14 -ம் திகதி பிரித்தானியாவிலுள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மணையில் நடைபெறவுள்ளது.

இந்த பிரமாண்டமான விழாவிற்கு NHS- ன் பங்குதாரர்கள், ஹெல்த்கேர் நிறுவனங்கள், மருத்துவ கூட்டமைப்புகள் என அனைவரையும் வரவேற்கிறோம்.

இந்த விழாவின் மூலம் மிகத் தனித்துவம் வாய்ந்த இந்தியா – பிரித்தானிய உறவுகளை மேப்படுத்துவதுடன் பல புதிய வாய்ப்புகளை உருவாகும் என்று நம்பிக்கை கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !