மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த மனநோயாளியின் தண்டனை நிறுத்தம் – உச்சநீதிமன்றம்

பாகிஸ்தானில் லாகூரைச் சேர்ந்த கிசார் ஹயாத் என்பவர் பொலிஸ்காரராக பணியாற்றி வந்த நிலையில், தன்னுடன் பணியாற்றிய சக பொலிஸ் அலுவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

லாகூர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கில் கடந்த 2001ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அவர் சிறையடைக்கப்பட்டார். கடந்த 2008ம் ஆண்டு தீவிரமான மனநோயாளியாக மாறிய கிசார் ஹயாத்துக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

எனினும், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கிசார் ஹயாத்தின் தாயார் பாக்கிஸ்தான் உச்ச நீதிமன்றில் முறையிட்டார். இதனிடையே, நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) காலை அவரை தூக்கிலிடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.

மனநிலை பாதிக்கப்பட்டவரை தூக்கிலிட்டு கொல்வதற்கு சர்வதேச சட்டங்கள் இடமளிக்காததால் இந்த தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என பல்வேறு தர்ப்பினரிடம் இருந்தும் பிறநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் கோரிக்கை எழுந்தது.

கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சகிப் நசிர், கிசார் ஹயாத்துக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சென்று பார்வையிட வேண்டும். அங்குள்ள மனநல மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது? என்று அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த கிசார் ஹயாத்தின் தாயார் மனு மீது நாளை (திங்கட்கிழமை) விசாணை இடம்பெறவுள்ளது.

கிசார் ஹயாத்தின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் நாளை நடைபெறவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !