மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பில் வாக்கெடுப்பு!

ஜேர்மனியின் Hesse மாகாணம் மரண தண்டனையை ஒழிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

உள்ளூர் தேர்தலுடன் நடைபெற்ற வாக்களிப்பில் அரசியல் சாசனப் பிரிவு 21ஐ ஒழிப்பதற்கு ஆதரவாக 83 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

மரண தண்டனையை அனுமதிக்கும் 1946இல் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்வதற்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய ’1949 இன் அடிப்படை சட்டம்’ என்று அழைக்கப்படும், மாகாண அரசியல் சாசனங்களை விட அதிக அதிகாரமுள்ள அரசியல் சாசனம் இயற்றப்பட்டது.

அது மரண தண்டனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் Hesse அந்த சட்ட திருத்தத்தை அமுல்படுத்தவேயில்லை, அதனால் அதன் மாகாண அரசியல் சாசனத்தில் மரண தண்டனை இடம்பெற்றிருந்தது.

1946 இற்கும் 1949 இற்கும் இடையில் Hesse நீதிமன்றங்கள் இரண்டுமுறை மரண தண்டனை வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !