மரண தண்டனைக்கு ஆயத்தம்! – தூக்கு கயிற்றின் தரம் தொடர்பாக ஆராய நடவடிக்கை!

தூக்கு மேடைக்கு பயன்படுத்தப்படும் கயிற்றின் தரத்தை ஆராய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

தூக்கு கயிறு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான தரத்தில் காணப்படுகின்றதா என்பது தொடர்பாக ஆராய்வதற்கு அதனை இலங்கை தரச்சான்றிதல் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தூக்கு கயிற்றின் தரம் தொடர்பாக ஏதேனும் சிக்கல் காணப்படும் பட்சத்தில், தரமான புதிய தூக்கு கயிறை வெளிநாட்டிலிருந்து விரைவில் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கயிறானது, கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !