மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டம்

எஃகு உலோகத்திற்குப் பதிலாக மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

தற்போது கார்கள் ‘ஸ்டீல்’ எனப்படும் எஃகு உலோகப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அதனால் கார்கள் அதிக எடையுடன் உள்ளன.

கார்களின் எடையைக் குறைப்பதற்காக மரக்கட்டைகள் மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மரத்தில் உள்ள ‘ஃபைபர்’ எனப்படும் நாரிழைகள் மூலம் கார் தயாரிக்க பயன்படும் உலோகக்கலவை உருவாக்கப்படவுள்ளது. அது எஃகு உலோகத்தை விட ஐந்தில் ஒரு பங்கு எடை மட்டுமே கொண்டது. அதே நேரத்தில் 5 மடங்கு பலம் வாய்ந்தது.

அதற்கான ஆய்வை ஜப்பானின் கியோடோ பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். அதை ஜப்பானின் டென்கோ கார்ப்பரேசன், டொயோட்டோ, டய்க்கோ நிஷிகவா கார்ப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளவுள்ளன.

மரக்கட்டைகள் மூலம் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பணி 2020 ஆம் ஆண்டிற்குள் முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !