மம்தா பானர்ஜிக்கே பிரதமராவதற்கு தகுதியுள்ளது: பா.ஜ.க தலைவரின் கருத்தால் பரபரப்பு

இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதென அம்மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் வெளியிட்ட கருத்து இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள பா.ஜனதாவை சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என நேற்று (சனிக்கிழமை) ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, திலிப் கோஷ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

“மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவாரானால் அது முதலமைச்சர் மம்தா பானர்ஜியாகவே இருக்க முடியும். அவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்குவாரென்பது உறுதி.

மேலும், மம்தா பானர்ஜியின் வெற்றி ஊடாகவே மேற்கு வங்கத்தின் எதிர்காலம் உள்ளது. அந்தவகையில் அவர் பிரதமரானால் முதல் பெங்காலி குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுவார்” என  திலிப் கோஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மேற்கு வங்கத்தில், மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பா.ஜ.க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், திலிப் கோஷ் வெளியிட்டுள்ள கருத்து அக்கட்சி உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !