மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை இன்று (புதன்கிழமை) அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அறிக்கை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, 147ஆவது நாளாகவும் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள், சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய அகழ்வுப் பணிகளை மன்னார் நீதிமன்ற நீதவான் சரவனராஜா நேரில் சென்று பார்வையிட்டதோடு, சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 323 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எச்சங்களில்  28 சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !