மனித உரிமைகள் தொடர்பான யு.என்.எச்.ஆர்.சி.யின் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு – எதிர்க்கட்சி
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, இதுபோன்ற தவறான எண்ணங்களினால் இலங்கை அபாயத்தை எதிர்கொள்கிறது என குறிப்பிட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தற்போதைய ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை எடுத்து கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச ஊடகங்களில் இத்தகைய செய்திகள் வெளியாவதால் இலங்கை பொருளாதார வளர்ச்சியில், இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.