Main Menu

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் நீக்கப்பட்டது நயினாதீவிற்கான பாஸ் நடைமுறை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ்  இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் வினவியது.

இதன்போது எமக்கு பதிலளித்த பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மால், அவ்வாறான எந்த பாஸ் நடைமுறை மற்றும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததுடன் உடனடியாகவே நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் உப.பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  இந்த விடயம் தொடர்பாக, எம்மால் குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு உப காவலரண்களில் பொறுப்பதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தமக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் இனி இவ்வாறான மட்டுப்பாடுகளில் விதிக்கமாட்டோம்” என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...
0Shares