மனம் ஒத்து விவாகரத்து செய்ய ஜூனியர் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதி அறிக்கை

ட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வனேஸ்ஸா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவியான இவானா ட்ரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் ட்ரம்ப், ஜூனியர் தொலைக்காட்சி பிரபலமாகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

ட்ரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜான் ட்ரம்ப் கடந்த 2005 ஆம் ஆண்டு மொடலான வனேஸ்ஸாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜான் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.

 

இந்நிலையில் நேற்று தம்பதிகள் இருவரும் மனம் ஒத்து 12 ஆண்டுகள் மணவாழ்க்கையை முறித்துக்கொண்டு அவரவர் வழியில் பயணிக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நீதி மன்றில் வனேஸ்ஸா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் ஐந்து குழந்தைகள் மற்றும் ட்ரம்ப் ஜூனியரின் சொத்துக்களை உரிமை கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஐந்து குழந்தைகளும் ட்ரம்ப் வசம் வளரும் என கூறப்படுகிறது.

எனினும் இது தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது ட்ரம்ப் நிறுவனமோ உத்தியோக பூர்வமாக எது வித கருத்தும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !