மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பதிலாக பெட்ரோலின் குரல் என நிகழ்ச்சி நடத்தலாம் – மம்தா சாடல்!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய அரசு அதனை வேடிக்கை பார்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல், டீசலின் குரல் என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
ஆனால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல் டீசலின் குரல் என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.