மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு சவுதிக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சவுதிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் தேவையற்ற பயணங்கள், ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் உங்கள் கடவுச்சீட்டை எச்சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் இலங்கைத் தூதுவராலயம் ஆலோசனை வழங்குகிறது” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
