மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் ஆந்திரா!

மத்திய அரசுக்கு எதிராக  ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

ஆந்திர பிரதேச சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) டெல்லியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வார்ப்பாட்டத்திற்காக 20 பெட்டிகளுடன் கூடிய இரண்டு புகையிரதங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பில் அழைப்பு விடுத்துள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !