மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: கனிமொழி

மத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“தற்போது நடைபெறும் ஆட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.
மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய காலத்தில் அரசு நடத்தியிருந்தால், மக்கள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடியவர்களை நியமித்திருப்பார்கள்.
இதேவேளை அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாதென்ற அச்சத்தின் காரணமாகவே தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு மக்களின் பிரச்சினைகள் பற்றி கவலைப்படாத அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
அந்தவகையில் நடைபெறவுள்ள தேர்தலில் உரியவர்களை மக்கள் தெரிவுசெய்ய வேண்டியது அவசியம்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.