மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பையூஜி மகராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியாரான பையூஜி மகராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தோரில் உள்ள தமது வீட்டில் பையூஜி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜமீன்தார் குடும்பத்து வாரிசான பையூஜி மகாராஜ் மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துறவறம் மேற்கொண்ட பையூஜிக்கு மத்தியப் பிரதேச அரசு சார்பில் கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்க முன் வந்த போதும், இதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

இந்தோரில் ஆசிரமம் அமைத்துள்ள பையூஜி ஆடம்பர பங்களா மெரிசிடிஸ் பென்ஸ் கார் சகிதம் ஆடம்பர சாமியாராக வலம் வந்தவர் ஆவார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !