மதுரோ சட்ட விரோதமானவர்: இத்தாலி அமைச்சர் குற்றச்சாட்டு

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சட்டவிரோதமானவர் என இத்தாலி உள்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

இத்தாலியில் பண்ணையொன்றுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த உள்துறை அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மதுரோ ஒரு குற்றவாளி. அவர் சட்டவிரோதமான, முறைக்கேடான ஜனாதிபதி. வெனிசுவேலாவின் சட்டவிரோத ஜனாதிபதி நாட்டு மக்களை கைது செய்து சித்திரவதை செய்து, மக்களை பட்டினியில் ஆழத்தி படுகொலை செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், நாட்டின் அரசியலமைப்பின்படி மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !