Main Menu

மதுரையில் பாரிய தீ விபத்து- 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு

மதுரை- தெற்கு மாசி வீதியிலுள்ள ஜவுளிக்கடையில்  ஏற்பட்ட  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வேளையில் திடீரென தீ பற்றியுள்ளது.

குறித்த தீ ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து,  தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வருகை வந்த  தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதன்போது, அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிப்பாடுகளில் சிக்கிய  சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய  தீயணைப்பு வீரர்கள் பலத்த காயங்களுடன், வைத்தியசாலைக்கு சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும், அவர்கள்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...