மதிய உணவில் பாம்பு- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
மேற்குவங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பாம்பு விழுந்த உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்த போது சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாப்பாட்டில் பாம்பு இருந்ததை அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.