Main Menu

மதத் தலைவர்களை தௌிவுபடுத்த நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை தரிசித்தனர்.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, மதஸ்தலங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக அனைத்து மதத் தலைவர்களையும் தௌிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக கூறினார்.

தேர்தல் சட்டம் இவ்வர்றுக்கு தடை வித்திருந்தாலும் தேர்தல் காலத்தில் அரசியல் சார்ந்த பிரசாரங்களை நடத்துவதையும் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் பதிவாகியுள்ளன என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மத தேர்தல் பிரசாரக்கூட்டத்தை நடத்துவதற்கும், வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கும் 1981 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 79ஆவது சரத்தின் பிரகாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் ஆன்மீக தலைவர்கள் பிரசாரக்கூட்டத்தில் கூட உரையாற்ற முடியாது என கூறவில்லை என குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய, ஆன்மீக நிலையத்துக்குள் கூட்டம் நடத்தவோ, வழிபாடுகளின் போது வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளையோ முன்னெடுக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மதத்தலைவர்ளை சந்தித்து அரசியல்வாதிகள் ஆசிபெறலாம். ஆனால், அந்த வளாகத்துக்குள் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த முடியாது என கூறினார்.