மணிலாவில் தட்டம்மை தொற்றுநோய் தீவிரமாக பரவி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தட்டம்மை தொற்றுநோய் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 19 ம் திகதி வரையான காலப்பகுதியில் 196 பேர் தட்டம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் 20 பேர் மாத்திரமே தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், இந்த வருடத்தில் அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இந்த தொற்றுநோய் காரணமாக இதுவரையில் சிறுவர்கள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தடுப்பூசி ஏற்றப்படாத 2.4 மில்லியன் சிறுவர்கள் தட்டம்மை நோய்த் தொற்று அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !