மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!
நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.